
பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிக்கும் 'L2: எம்பூரான்' ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
மலையாள நடிகர் பிரித்விராஜ், இயக்குனர் அவதாரம் எடுத்தது 'லூசிபர்' என்ற படத்தின் மூலம்.
பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்த படத்தில், மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்தார். நாயகியாக மஞ்சு வாரியார் நடித்த இந்த படம், பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது மட்டுமின்றி, தெலுங்கில் இப்படத்தை ரீமேக் செய்திருந்தனர். அதில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர்.
இந்த நிலையில், பிரித்விராஜ், லூசிபர் திரைப்படத்தின் அடுத்த பகுதியை எடுத்து முடித்துள்ளார்.
'L2: எம்பூரான்' என பெயரிடப்பட்ட படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறும் இந்த நேரத்தில், இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்திலும், மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியார் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
L2: எம்பூரான் ஃபர்ஸ்ட் லுக்
#L2E #Empuraan First Look. Tomorrow 5pm IST@mohanlal #muraligopy @antonypbvr @aashirvadcine @Subaskaran_A @LycaProductions @gkmtamilkumaran @prithvirajprod #SureshBalaje #GeorgePius @ManjuWarrier4 @ttovino @Indrajith_S @deepakdev4u #sujithvaassudev #NirmalSahadev #Mohandas… pic.twitter.com/rJgWjjVl6P
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) November 10, 2023