Page Loader
'பிரேமலு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

'பிரேமலு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

எழுதியவர் Sindhuja SM
Mar 17, 2024
12:48 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் ஹிட் ஆன 'பிரேமலு' என்ற திரைப்படம் தமிழில் கடந்த 15ஆம் தேதி வெளியாகியது. இந்நிலையில், இது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வரும் மார்ச் 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'பிரேமலு', 2024ஆம் ஆண்டின் மிக வெற்றிகரமான மலையாளத் திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த படம் வெளியாகி ஒரு மாதத்திற்குப் பிறகும் பார்வையாளர்களிடமிருந்து அதிகமான வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 'பிரேமலு' படத்தில் நஸ்லென் கே.கபூர், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மார்ச் தொடக்கத்திலேயே இந்த படம் OTT தளத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பார்த்த பிறகு இப்படத்தின் OTT வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

'பிரேமலு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு