LOADING...
சாலார் டிரெய்லர்: 2 நண்பர்கள் எதிரிகளான கதையை விவரிக்கிறது 
சாலார் டிரெய்லர்: 2 நண்பர்கள் எதிரிகளான கதையை விவரிக்கிறது

சாலார் டிரெய்லர்: 2 நண்பர்கள் எதிரிகளான கதையை விவரிக்கிறது 

எழுதியவர் Venkatalakshmi V
Dec 18, 2023
04:51 pm

செய்தி முன்னோட்டம்

கன்னடத்தில் கே ஜி எஃப் சாப்டர் 1, மற்றும் சாப்டர் 2 என இரண்டு சூப்பர்ஹிட் வெற்றி படத்தை இயக்கி, இந்திய சினிமாவை தன்னை நோக்கி திருப்பியவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இந்த படங்களை போலவே, தற்போது அவர் தெலுங்கு நடிகர் பிரபாஸை வைத்து இயக்கும் 'சாலார்' திரைப்படமும் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது. அதில், இரண்டு உயிர் நண்பர்கள் கான்சார் என்கிற ஊரால் எப்படி பரம விரோதிகளாக மாறுகிறார்கள் என்பதை காட்சிப்படுத்தி உள்ளார். முதல் பாகத்தில் இந்த இரண்டு நண்பர்களின் சிறு வயது முதல், எப்படி விரோதிகளாக மாறுகிறார்கள் என்பது வரையிலான காட்சிகள் இடம்பெறுகிறது.

card 2

இரண்டு பாகங்களாக வெளியாகும் சாலார்

படத்தின் இரண்டாம் பாகம் முழுக்க இந்த நண்பர்களின் விரோதம் குறித்த காட்சிகள் இடம்பெறும் என்பதை ட்ரைலரிலேயே தெரியப்படுத்தி, அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை தற்போதே கிளப்பி விட்டார் இயக்குனர். அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தில், கதாநாயகன் பிரபாஸுக்கு நண்பராக பிருத்திவிராஜ் நடித்துள்ளார். ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் டினோ ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதிபாபு, ஸ்ரேயா ரெட்டி, கருடா ராம், போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கே ஜி எஃப் இரண்டு பாகங்களை இயக்கிய ஹம்பலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. 'சாலார்' திரைப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சாலார் டிரெய்லர்