Page Loader
மாதவன்-சித்தார்த் படத்தில், இசையமைப்பாளராக அறிமுகமான பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் 
இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன்

மாதவன்-சித்தார்த் படத்தில், இசையமைப்பாளராக அறிமுகமான பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் 

எழுதியவர் Venkatalakshmi V
May 05, 2023
08:09 am

செய்தி முன்னோட்டம்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அறிமுகமானவர் ஷக்திஸ்ரீ கோபாலன். 'கடல்' திரைப்படத்தில் 'நெஞ்சுக்குள்ளே' என்ற பாடலின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் பல பொழிகளில், பல பிரபல பாடல்கள் பாடியுள்ளார் ஷக்திஸ்ரீ. தற்போது வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற 'அகநாக' பாடலும் இவர் பாடியதே. தற்போது, தயாரிப்பாளர் ஷஷிகாந்த், இயக்குனராக அறிமுகமாகும் 'டெஸ்ட்' திரைப்படத்தின் மூலமாக, இசையமைப்பாளர் ஆகிறார் ஷக்திஸ்ரீ. 'டெஸ்ட்' திரைப்படம், விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை என்று அந்த படத்தின் போஸ்டர் மூலம் விளங்குகிறது. இந்த திரைப்படத்தில், மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாராநடிக்கின்றனர். சென்னை மற்றும் பெங்களூரில், இந்த படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம், இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஷக்திஸ்ரீ இசையமைப்பாளரானதை அறிவித்த ரஹ்மான்