ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் 69வது பிறந்தநாள்: ஜாக் பற்றிய அதிகம் அறியாத தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
பிரபல ஹாலிவுட் நடிகரும், தற்காப்பு கலைகளின் முன்னோடியுமான ஜாக்கிசானின் பிறந்தநாள் இன்று. அவர், இன்று தனது 69 -வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
திரையில் இவரின் வேடிக்கையான உடல்மொழிகளும், மின்னல் போல, பறந்து பறந்து எதிரிகளை பந்தாடும் திறனுக்கும், உலகெங்கிலும் ரசிகர்கள் ஏராளம்.
இவரின் புகழை கண்டு, இவரின் பெயரிலேயே ஒரு கார்டூனும், டிவியில் ஒளிபரப்பாகிறது. அதில் சில நேரங்களில், சிறப்பு தோற்றத்தில் ஜாக்கியும் நடித்தார்.
ஜாக்கிசான் பிறந்தது ஹாங்காங் நகரத்தில். இவரது தந்தை ஒரு சமையல்காரராம். அதோடு அவர் முன்னாள் உளவாளியாக இருந்தவர் என செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போது நிகழ்ந்த அரசியல் மாற்றங்களினால், ஜக்கியின் தந்தை, குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவிற்கு சென்று விட்டாராம்.
ஜாக்கிசான்
சிறுவயதிலேயே சினிமாவில் நுழைந்த ஜாக்கி
இவரின் இயற்பெயர் சான் கோங்-சங். இவர் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, ஜாக் என்ற கட்டட கான்ட்ராக்டரிடம் உதவியாளராக இருந்துள்ளார். அதனால் இவரை, 'ஜாக்கி' என்று அழைத்தார்களாம். இதனால் தான், தன்னுடைய பெயரை 'ஜாக்கி' சான் என மாற்றிக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பபள்ளியிலே இவருக்கு படிப்பு ஏறவில்லை. அதனால், நாடக பள்ளியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தன்னுடைய 5 வயதிலேயே சினிமா துறைக்கு நுழைந்தார் ஜாக்கி.
ப்ரூஸ்லீ படத்தில், அவரின் டூப்பாகவும் நடித்துள்ளார். அதன் பின்னர் பல படங்களில் ஸ்டண்ட்மேன், ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர், 1976 -இல் முதல்முறையாக, ப்ரூஸ்லீயின் மறைவிற்கு பிறகு, அவரின் இடத்தை நிரப்ப, இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின்னர், இன்று வரை 130 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.