சிவகார்த்திகேயன்- ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணையும் பூஜா ஹெக்டே
செய்தி முன்னோட்டம்
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், இந்த வாரம் வெளியாகவுள்ளது.
அதனை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டெர்னஷனல் நிறுவன தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்திலும் நடித்து வருகிறார்.
இதில் அவருக்கு முதல் முறையாக ஜோடியாகிறார் சாய் பல்லவி. சிவகார்த்திகேயன் நன்றாக நடனமாடுவார்.
அதேபோல சாய் பல்லவியும் அசாத்தியமான டான்சர்.
இவர்கள் இருவரும் இணைந்துள்ள இத்திரைப்படத்தின் சாங்ஸ் எப்படி இருக்குமோ என இப்போதே ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
அதனை தொடர்ந்து, சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
card 2
'தர்பார்' படத்திற்கு பிறகு களமிறங்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்குனர் முருகதாஸ், கடைசியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ வைத்து, 'தர்பார்' திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
விமர்சனரீதியாக இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. நீண்ட இடைவேளைக்கு பிறகு, தற்போது சிவர்கார்த்திகேயனுடன், 'எஸ்கே 22' திரைப்படத்திற்காக இணைகிறார் முருகதாஸ்.
இந்த நிலையில், இவர்கள் இணையும் படம் குறித்து மற்றுமொரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 'எஸ்கே 22' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
'பீஸ்ட்' படத்திற்கு பின்னர் தமிழில் வேறு எந்த படத்திலும் கமிட்டாகாத பூஜா ஹெக்டே, தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.