3,000 கோடி வசூல் செய்த பொன்னியின் செல்வன் 2 - ப்ளூ சட்டை மாறனின் நக்கல் பதிவு!
தமிழ் சினிமாவில் மணிரத்தனம் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான படம் தான் பொன்னியின் செல்வன். ஏற்கனவே இதன் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் இரண்டாவது பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் 300 கோடி வசூலானது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால் முதல் பாகத்தை விட குறைவு என கூறி வந்த நிலையில், திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் சமூக வலைத்தளத்தில் 3,000 கோடி ரூபாய் பொன்னியின் செல்வன் 2 வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கிண்டலாக பதிவிட்டுள்ளார்.