பொன்னியின் செல்வன் 2 - உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
கோலிவுட் சினிமாவில் கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் பொன்னியின் செல்வன். மணிரத்தினம் இயக்கத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் கடந்த ஆண்டு செப் 30 ஆம் தேதி வெளியானது. ரூ.500 கோடி ரூபாய் வசூலை பெற்ற இப்படம் அதிக தொகை வசூலித்த படத்தில் தமிழ் சினிமாவில் இரண்டாவது இடத்தை பிடித்தது. முதல் பாகத்தில் உள்ள சுவாரசியம், பிரம்மாண்டம் மற்றும் எதிர்பார்ப்பை இரண்டாவது பாகமும் பூர்த்தி செய்யும் எனக்கூறப்பட்டது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தின் வசூல் ஆனது, இரண்டு நாட்களில் ரூ.50 கோடி ரூபாயை எட்டியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.25 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் 2 இரண்டு நாளில் செய்த வசூல் எவ்வளவு?
மொத்தமாக இப்படம் ரூ. 80 கோடி ரூபாய் வசூலை எட்டியிருக்கிறது. முதல் பாகத்தை இப்படம் வசூலில் முறியடிக்கும் எனவும் கூறப்படுகிறது. விமர்சனம் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதாவது இரண்டாவது பாகம் கதாபாத்திரங்களின் தன்மை மாற்றப்பட்டதாகவும், சினிமாவுக்காக செய்யப்பட்ட சமரசங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை எனவும் கூறி வருகிறார்கள். மேலும், ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம், கார்த்திக், ஐஸ்வர்யா ராய் ஆகிய 5 பேர் தான் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய நடிகர்களாக இருந்தாலும், முதல் பாகத்தில் விக்ரமிற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்ற பேச்சு இருந்தது. அதனை சரிசெய்ய 2ஆம் பாகம் முழுக்க விக்ரம் தான் படத்தை தாங்கி பிடித்துள்ளார் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.