Loading...
'பாக்கெட் நாவல்': தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'பாக்கெட் நாவல்': தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2026
01:49 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் மாற்று சிந்தனை கொண்ட முன்னணி இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜாவின் 4-வது திரைப்படமான 'பாக்கெட் நாவல்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 'சூப்பர் டீலக்ஸ்' (2019) திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம், வரும் 2027 ஜனவரி 14 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் உலகெங்கும் வெளியாகவுள்ளது.

பட விவரங்கள்

படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் திலீப் சுப்பராயன், ராஜ் பி. ஷெட்டி மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இசைஞானி இளையராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுடன் ஜி.வி. பிரகாஷ் கரம்கோர்க்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

'பாக்கெட் நாவல்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதன் மூலம், 2027 பொங்கல் பாக்ஸ் ஆபீஸ் ரேஸ் இப்போதே சூடுபிடித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT