Page Loader
ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்துகொண்டு புதுமண தம்பதியரை ஆசிர்வதித்தார் பிரதமர் மோடி

ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்துகொண்டு புதுமண தம்பதியரை ஆசிர்வதித்தார் பிரதமர் மோடி

எழுதியவர் Sindhuja SM
Jul 14, 2024
09:36 am

செய்தி முன்னோட்டம்

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் 'சுப் ஆஷிர்வாத்' விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டார். அவர்களுக்கு திருமணமான ஒரு நாள் கழித்து நடைபெற்ற இந்த விழாவில், உலகப் பிரபலங்கள், தொழில் அதிபர்கள், ஆன்மீகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் பிரதமரின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் பெறுவதை ஒரு வைரல் வீடியோ காட்டுகிறது. அதற்கு பின்னர், புதுமண தம்பதிக்கு பிரதமர் மோடி பரிசு வழங்கினார். மும்பையில் உள்ள அம்பானி குடும்பத்திற்குச் சொந்தமான ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் 'சுப் ஆஷிர்வாத்'(ஆசீர்வாத விழா) என்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியா 

பிரதமர் மோடியை வரவேற்ற முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்று, பிரபலங்கள், திரையுலக நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர் போன்ற பாலிவுட் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அது போக, பல அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ட்விட்டர் அஞ்சல்

புதுமண தம்பதியரை ஆசிர்வதித்தார் பிரதமர் மோடி