வைரலாகும் நடிகை ஸ்ருதி ஹாசனின் புதிய டாட்டூ
செய்தி முன்னோட்டம்
நடிகை ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது அவர் அளித்த ஒரு பேட்டியின் போது, அவரின் டாட்டூவிற்கான காரணத்தை கூறினார்.
நடிகை ஸ்ருதிக்கு நடிப்பை விட, இசை மேலே மிகவும் ஈடுபாடு என்பது பலருக்கும் தெரிந்து இருக்கும். இசை சம்மந்தப்பட்ட மேற்படிப்பையும், அவர் அமெரிக்காவில் முடித்தார். அதோடு அங்கு ஓரிரு அல்பங்களையும் வெளியிட்டிருந்தார்.
அதை தொடர்ந்து தான், கமல் நடிப்பில் வெளியான 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படத்திற்கு, இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதுமட்டுமல்லாது, தனக்கு தமிழ் மீதும் ஆர்வம் அதிகம் எனவும் அவர் அந்த பேட்டியில் கூறினார். தான் அமெரிக்கா சென்றாலும், மும்பையில் வளர்ந்தாலும், தான் எப்போதும் சென்னை பொண்ணு தான் எனவும் அவர் கூறினார்.
card 2
ஸ்ருதியின் புதிய டாட்டூ
தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக, தனது தோள்பட்டையில் ஏற்கனவே 'ஷ்ருதி' என்ற டாட்டூ குத்தியுள்ளார். இசை மேல் இருக்கும் பிரியத்தாலும், தமிழ் மேல் கொண்ட காதலாலும் இந்த டாட்டூ போட்டுக்கொண்டார்.
இதை தொடர்ந்து, தற்போது தன்னுடைய இறை பக்தியை காட்டுவதற்கு, அந்த பெயரின் மேலே, ஒரு வேல் உருவத்தை பொருத்தி உள்ளார். ஸ்ருதிக்கு முருக கடவுளின் மேல் ஈடுபாடு அதிகம் என செய்திகள் கூறுகின்றன. அதை உணர்த்த அந்த வேல் டாட்டூ எனவும் ஊடக செய்திகள் கூறுகின்றன.
ஒரு பக்கம், நாத்திகம் பேசும் கமல், மறுபக்கம் வேல் உருவத்தை பச்சை குத்தி கொள்ளும் அவரின் பெண் ஸ்ருதி என இணையத்தில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.