டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் யோகி பாபு!
செய்தி முன்னோட்டம்
இந்த வார இறுதியில், விஜய் ஆண்டனி இயக்கி, நடித்துள்ள 'பிச்சைக்காரன் 2 ' படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
சென்ற மாதமே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கபட்ட நேரத்தில், படம் 'கதை திருட்டு' வழக்கில் சிக்கியது.
தற்போது அந்த தடைகள் எல்லாவற்றையும் தாண்டி, வரும் மே-19 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் ஸ்னீக்பீக்(sneak-peak) ஒன்றை, இன்று(மே 16) மாலை வெளியிட்டனர் படக்குழுவினர்.
அந்த வீடியோவில், யோகி பாபு, வித்தியாசமாக, QR Code கொண்டு பிச்சை எடுப்பது போல காட்சிகள் வருகிறது.
இந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களிலேயே வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில், காவ்யா தப்பார், ராதாரவி, ஒயி.ஜி மகேந்திரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
பிச்சைக்காரன் 2 sneak-peak
2nd Sneak Peek
— vijayantony (@vijayantony) May 16, 2023
Pichaikkaran 2 -https://t.co/wdusk8581x
Bichagadu 2 - https://t.co/LAUz5Rcl8r pic.twitter.com/Jg3FKQ9bnS