Page Loader
FEFSI ஊழியர்களின் நிபந்தனைகளை விமர்சித்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்
FEFSI ஊழியர்களின் நிபந்தனைகளை விமர்சித்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்

FEFSI ஊழியர்களின் நிபந்தனைகளை விமர்சித்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 27, 2023
05:05 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரைப்படவுலகின் தொழிலாளர்களின் சம்மேளனமான பெப்சிக்கு(FEFSI) கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர். தமிழ் திரையுலகின் தொழிலாளர்கள் நன்மைக்காக உருவாக்கப்பட்ட இந்த சம்மேளனத்தின் பல்லாயிரக்கணக்கான நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சமீபகாலமாக, தமிழ் சினிமா ஷூட்டிங்குகள் பெரும்பான்மையாக வெளிமாநிலத்திலோ, வெளிநாட்டிலோ தான் நடைபெறுகிறது. இதனால் பெப்சி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்று புகார்கள் எழுந்தது. இதுகுறித்து தமிழ் திரைப்படவுலகின் தொழிலாளர்களின் சம்மேளனமான பெப்சியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட, பெப்சி இந்த அதிரடி அறிவிப்பினை வெளியிட்டது. மேலும், தமிழ் படங்களில் தமிழ் நடிகர்கள் தான் நடிக்க வைக்கப்பட வேண்டும் என்றும் பெப்சி அறிவுறுத்தியுள்ளது.

card 2

FEFSIயின் உத்தரவை கண்டித்த பவன் கல்யாண்

தெலுங்கில் பிரபலமாக இருக்கும் நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், FEFSI யின் இந்த உத்தரவை விமர்சித்துள்ளார். அவர் தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில், ப்ரோ என்ற திரைப்படம் நடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது FEFSI குறித்து அவர் கூறியதாவது, "என் மொழி, என் நடிகர்கள் என நம்மை நாமே சுருக்கி கொள்ளக்கூடாது. தெலுங்கு சினிமா பலதரப்பட்ட மொழிகள் பேசும் தொழில்நுட்ப கலைஞர்களை எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது. பல மொழிகளில் இருக்கும் ஆளுமைகளை ஒன்று சேர்த்து ஒரு படத்தை உருவாக்கினால் தான், அது வெற்றியடையும். தமிழ் திரைப்பட உலக சம்மேளனம் இது பற்றி ஆலோசித்து விதிகளை தளர்த்தினால் தான், RRR போன்ற உலகதரம் வாய்ந்த படங்களை உருவாக்க முடியும்"