Page Loader
590 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ள 'பதான்' திரைப்படம்
பதான் திரைப்படத்தின் வசூல் சாதனை

590 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ள 'பதான்' திரைப்படம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 31, 2023
08:10 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியான 'பதான்' திரைப்படம், வெளியாவதற்கு முன்பே புக்கிங்கில் சாதனை படைத்தது. தற்போது உலகெங்கும் வெளியான நிலையில், வசூலை வாரி குவித்துள்ளதாக, அப்படத்தின் தயாரிப்பு நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. இப்படம், இந்தியாவில் கிட்டத்தட்ட ரூ.335 கோடியும், வெளிநாடுகளில் கிட்டத்தட்ட ரூ.208 கோடியும் வசூலித்து உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகமொத்தத்தில், பதான் திரைப்படம், ரூ.590 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கான், இந்த வெற்றி தனக்கு மிகவும் முக்கியம் என கூறி இருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

பதான் திரைப்படத்தின் வசூல் சாதனை