பரிதாபங்கள் டிராவிட் செல்வம் நடித்த 'ட்ரோன்ஸ்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
பரிதாபங்கள் டிராவிட் செல்வம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ட்ரோன்ஸ்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை முதல் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு, ஃபேண்டஸி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
விவரம்
படக்குழு விவரம்
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ஜிஎம் மோர்கன் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
ட்ரோன்ஸ் திரைப்படத்தில், பரிதாபங்கள் டிராவிட் செல்வம் மற்றும் சித்தி இத்னானி ஆகியோருடன் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, குரேஷி, சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் ஆர்ஜே தீபக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு எஸ்.ஆர். ஹரி இசையமைத்துள்ளார்; ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் மேற்கொண்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Recent Family Audience Favourite 😁#Drones (Tamil)
— OTT Trackers (@OTT_Trackers) November 19, 2026
Streaming from Tonight on PrimeVideo in Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi 🍿!!#OTT_Trackers https://t.co/TXQ14Vx0bZ pic.twitter.com/xmcEaaA7jf