Page Loader
'பரிதாபங்கள்' கோபி - சுதாகர் நடிக்கும் புதிய படம் இன்று தொடக்கம்
'பரிதாபங்கள்' கோபி-சுதாகரின் புதிய படம் அறிவிப்பு

'பரிதாபங்கள்' கோபி - சுதாகர் நடிக்கும் புதிய படம் இன்று தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2023
08:42 pm

செய்தி முன்னோட்டம்

யூடியூப் சேனலான 'பரிதாபங்கள்' மூலம், அனைவராலும் ரசிக்கப்பட்ட ஜோடியான கோபி மற்றும் சுதாகர், தயாரித்து, நடிக்கும் புதிய படத்தின் பூஜை, இன்று(ஜனவரி 23) நடைபெற்றது. இதற்கு முன்னரே இருவரும், கிரௌட் பண்டிங் மூலமாக, பொதுமக்களிடம் நிதி திரட்டி, ஒரு படத்தை தயாரிக்கவிருப்பதாக அறிவித்திருந்தனர். ஆனால், கொரோனாவாலும், போதிய நிதியின்மையாலும், அப்படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக, தற்போது தெரிவித்துள்ளனர். இன்று பூஜையுடன் துவங்கப்பட்ட இப்படத்தை, அறிமுக இயக்குனர், விஷ்ணு விஜயன் இயக்குகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கும் இப்படம் வெற்றியடைந்தபின், தாங்கள் முதலில் துவங்கிய படத்திற்கு இணை தயாரிப்பாளராக சிலர் முன்வரலாம் என்றும், அப்போது அந்த படத்தையும் வெளியிடுவோம் என இந்த 'பரிதாபங்கள்' ஜோடி, நம்பிக்கையுடன் தெரிவித்தது.

ட்விட்டர் அஞ்சல்

கோபி - சுதாகர் நடிக்கும் புதிய படம்