இன்று பத்ம விருதுகள் வழங்கல்: நடிகர் மம்மூட்டி, ஆர். மாதவன், மறைந்த தர்மேந்திராவுக்கு உயரிய விருதுகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதுகளாகக் கருதப்படும் பத்ம விருதுகள் வழங்கும் விழா, தலைநகர் புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மே 25) நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தங்களது துறைகளில் சாதனை படைத்த ஆளுமைகளுக்கு இந்த விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலில் மொத்தம் 131 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல் மற்றும் பொதுச் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விபூஷண் (Padma Vibhushan): 5 நபர்கள் பத்ம பூஷண் (Padma Bhushan): 13 நபர்கள் பத்ம ஸ்ரீ (Padma Shri): 113 நபர்கள்
சாதனை
சினிமா மற்றும் இசைத் துறை சாதனையாளர்கள்
இந்த ஆண்டு பத்ம விருதுகள் பட்டியலில் இந்தியத் திரைப்படத் துறை மற்றும் இசை உலகைச் சேர்ந்த பல முக்கிய நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர் மறைந்த தர்மேந்திரா- பத்ம விபூஷண் (மறைவுக்குப் பின்) மம்மூட்டி- பத்ம பூஷண் அல்கா யாக்னிக்- பத்ம பூஷண் மாதவன்- பத்ம ஸ்ரீ மறைந்த சதீஷ் ஷா- பத்ம ஸ்ரீ (மறைவுக்குப் பின்) பிரோசென்ஜித் சாட்டர்ஜி- பத்ம ஸ்ரீ 1954-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பத்ம விருதுகள், நாட்டின் மிக உயரிய கௌரவமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.