இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் OTT ரிலீஸ்கள்
வார இறுதி வந்தாலே நம் மனதில் உற்சாகம் பிறந்துவிடும். நம் விடுமுறை நாட்களின் பொழுதுபோக்காக ஒவ்வொரு OTT தளமும் போட்டி போட்டு கொண்டு படங்களை வெளியிடுகிறது. அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் OTTயில் வெளியாக உள்ளன என்று பார்ப்போம். முதலில் பார்க்க போகும் வெப் சீரிஸ் "ஹாஃப் ப்ண்ட் புஃல் ப்ண்ட்" இந்த வெப் சீரிஸில் ஆஷிஷ் வித்யார்த்தி, சோனாலி குல்கர்னி, மற்றும் அஷ்வந்த் அசோக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை வி.கே.பிரகாஷ் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸ் இன்று முதல் அமேசான் ப்ரைம் OTT -ல் வெளியாகிறது.
இந்த வாரம் வெளியாக இருக்கும் படங்கள் எந்தெந்த OTT -யில் ரிலீஸ் ஆகிறது?
நெட்பிலிக்ஸ்-ல் இந்த வாரம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரையரங்குளில் வெளிவந்த கழக தலைவன் வெளியாகவுள்ளது. இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள அரியிப்பு என்கிற மலையாள படம் வெளியாகவுள்ளது. அடுத்ததாக ஹாலிவுட் படங்களான தி பிக் ஃபோர் மற்றும் ஐ பிலிவ் இன் சாண்டா வெளியாகியுள்ளன. ஹிந்தி படங்களான டாக்டர் ஜி மற்றும் கோட் நேம் டிரங்கா வெளியாகி உள்ளது. டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இயக்குநர் ஷஷாங்க் கைதான் இயக்கியுள்ள கோவிந்தா நாம் மேரா படம் வெளியாக உள்ளன. ஜீ-5 OTT தளத்தில் ஸ்டராங் பாதர், ஸ்டராங் டாட்டர் என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியாகி உள்ளன. மற்றும் ஆப்பிள் டிவி OTT -ல் டிடெக்ட்டிவ் நைட்: ரெடம்ப்ஷன் ஹாலிவுட் படம் வெளியாகி உள்ளன.