
ஓடிடியில் வெளியானது வேட்டையன் மற்றும் தேவரா! எங்கே பார்க்கலாம்?
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த இரண்டு திரைப்படங்கள் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன், இன்று நவம்பர் 8ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.
வேட்டையன் நவம்பர் 8 முதல் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran #FahadhFaasil @RanaDaggubati @ManjuWarrier4 @abhiramiact @ritika_offl @officialdushara @RakshanVJ
— prime video IN (@PrimeVideoIN) November 7, 2024
தேவரா
Netflix-இல் வெளியான தேவரா
ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவாரா பகுதி 1 திரைப்படமும், இன்று நவம்பர் 8, Netflix இல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இது முதலில் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் மட்டுமே கிடைக்கும்.
இப்படத்தின் இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி இன்னும் தெரியவில்லை. கொரட்டாலா சிவா இயக்கிய இந்தப் படம், ஜூனியர் என்டிஆர் நடித்த கடலோர கிராமத் தலைவரான தேவாராவை பற்றியது.
கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பழிவாங்கும் ஒரு கடத்தல்காரனை பற்றியது இந்த கதை.
இப்படத்தில், அப்பா- மகன் கதாபாத்திரத்தில் ஜூனியர் NTR, ஜான்வி கபூர், சைஃப் அலி கான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில், பிரகாஷ் ராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.