
BAFTA 2024: 7 விருதுகளை குவித்த 'ஒபென்ஹெய்மர்' திரைப்படம்
செய்தி முன்னோட்டம்
பிரபலமான பாஃப்டா திரைப்பட விருதுகள் விழா, பிப்ரவரி 18, ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்றது.
இந்த திரைப்பட விழாவில், கிறிஸ்டோபர் நோலனின் 'ஓப்பன்ஹைமர்' விருது பல விருதுகளை வென்றது.
சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் உட்பட ஏழு விருதுகளை இத்திரைப்படம் வென்றது.
மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஆஸ்கார் 2024 இல் இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கான முன்னோட்டம் தான் இந்த பாஃப்டா திரைப்பட விருதுகள்.
முன்னதாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா கெர்விக்கின் 'பார்பி' திரைப்படம் எந்த விருதுகளையும் பெறாதது அப்படத்தின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.
அதே நேரத்தில் 'புவர் திங்ஸ்' என்ற திரைப்படம் ஐந்து விருதுகளை வென்றது.
இந்த விருது நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவராக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
BAFTA 2024 திரைப்பட விருதுகள் விழா
#CinemaUpdate | BAFTA திரைப்பட விருது விழாவில் 7 விருதுகளை வென்ற Oppenheimer #SunNews | #BAFTAs | #Oppenheimer pic.twitter.com/zYR5rCqQAC
— Sun News (@sunnewstamil) February 19, 2024