அருண்ராஜா காமராஜா வரிகளில் யுவன் இசையில், பார்முலா-4 பாடல் வெளியீடு
தமிழ்நாடு விளையாட்டுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா - 4 நடத்தவுள்ளது. இன்று சென்னை தீவுத்திடல் வரை மைதானத்தைச் சுற்றி இந்த போட்டி தொடங்கும். சென்னையில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 தினங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக போட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட வேண்டிய ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இந்த போட்டியின் ஸ்பெஷல் பாடல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் இந்த பாடல் உருவாகியுள்ளது.