தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வீட்டில் தொடரும் விவாகரத்துகள்
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு படவுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் ரஜினி, கமலுடன் நெருங்கிய நட்பில் இருப்பவர்.
இவரின் மகன் தான், 'RRR' படத்தின் நாயகன் ராம் சரண்.
ஒரே வீட்டில், தந்தை-மகன் மட்டுமின்றி, சிரஞ்சீவியின் குடும்பமே திரையுலகில் உள்ளனர்.
'மெகா' பேமிலி என பெயரிடும் அளவிற்கு, பலரும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.
அதில் ஒருவர் தான் நிஹாரிகா. இவர் விஜய் சேதுபதி-கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து தெலுங்கு படவுலகில் பக்கமாக கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.
இவருக்கும், குண்டூர் மாவட்ட IG-யின் மகனான சைதன்யாவுடன், சில ஆண்டுகளுக்கு முன்னர் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
card 2
மகள், தம்பியை தொடர்ந்து, தம்பி மகளும் விவாகரத்து
சென்ற ஆண்டு, ஹைதராபாதில் ஒரு கிளப்பில் இரவு நடத்தப்பட்ட ரைடில், போதை பொருள் இருந்ததற்காக நிஹாரிகா கைது செய்யப்பட்டார் என அப்போது செய்திகள் வெளியாகின.
அவர் அதை மறுத்தாலும், அதன் பிறகு, அவரின் திருமண வாழ்க்கையில் விரிசல் விழ துவங்கியது.
இந்நிலையில், இன்று, இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது மட்டுமின்றி, சிரஞ்சீவியின் தம்பியும், நடிகர்-அரசியல்வாதியான பவன் கல்யாணுக்கும் திருமண உறவில் விரிசல் எழுந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவரது மனைவி ஒரு ரஷ்ய மாடல் ஆவர்.
சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜாவிற்கும் திருமணம் முறிந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
'மெகாஸ்டார்' என்றாலும், அவரது வீட்டிலும் ஒரு சாமானியனை போல பல பிரச்னைகள் உண்டு.