Page Loader
லோகேஷ்-ஸ்ருதியின் 'இனிமேல்' டீஸர் வெளியானது; பங்கமாய் கலாய்த்த நெட்டிஸன்கள் 
'இனிமேல்' ஆல்பத்தின் டீஸர் நேற்று வெளியானது

லோகேஷ்-ஸ்ருதியின் 'இனிமேல்' டீஸர் வெளியானது; பங்கமாய் கலாய்த்த நெட்டிஸன்கள் 

எழுதியவர் Venkatalakshmi V
Mar 22, 2024
10:21 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் 'இனிமேல்' ஆல்பத்தின் டீஸர் நேற்று வெளியானது. அதில் ஸ்ருதிஹாசனுடன் அவர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகளை பார்த்து, இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக நடிகை காயத்ரி, "வாட் இஸ் திஸ் மா?" என கேள்வி கேட்டு கிண்டலடித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் தன்னுடைய படங்களில் ஹீரோ-ஹீரோயினுக்கான ரொமான்ஸ் காட்சிகளை வைப்பதில்லை. குறிப்பாக 'விக்ரம்' படத்தில், ஃபஹத் ஃபாசிலுடன் ஜோடியாக நடித்த காயத்ரியின் கதாபாத்திரத்தை வில்லன் கதாபாத்திரம் கொடூரமாக கொலை செய்வது போல அமைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் லோகேஷ் மட்டும், ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். இதை பார்த்து தான் காயத்ரி கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். இணையத்தில் வைரலான மற்ற மீம்ஸ்களையும் பாருங்கள்.

ட்விட்டர் அஞ்சல்

கேள்வி கேட்ட காயத்ரி

ட்விட்டர் அஞ்சல்

ரோலெக்ஸ் காயத்ரி

ட்விட்டர் அஞ்சல்

கலாய்த்த நெட்டிஸன்கள் 

ட்விட்டர் அஞ்சல்

கலாய்த்த நெட்டிஸன்கள்