Page Loader
அஞ்சலியை பிடித்து தள்ளிய பாலைய்யா..வைரலாகும் வீடியோ
இந்த சம்பவத்தால் தற்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார் பாலகிருஷ்ணா

அஞ்சலியை பிடித்து தள்ளிய பாலைய்யா..வைரலாகும் வீடியோ

எழுதியவர் Venkatalakshmi V
May 30, 2024
01:57 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், ரசிகர்களால் அன்பாக பாலைய்யா என்று அழைக்கப்படும் தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணா, நடிகை அஞ்சலியை மேடையில் தள்ளிய சம்பவத்தால் தற்போது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார். இந்த நிகழ்வு அஞ்சலியின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் படமான கேங்க்ஸ் ஆஃப் கோதாவரியின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் நடந்தது. அந்த விழாவிற்கு பாலைய்யா தலைமை விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஆன்லைனில் வைரலாக பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மேடையின் மீது நடிகர்-நடிகைகள் நின்று கொண்டிருக்கும் போது, அஞ்சலியை சற்று நகருமாறு பாலையா தெரிவித்துள்ளார். அதனை அஞ்சலி கவனிக்காததால், அவரை தள்ளிவிட்டுள்ளார் பாலைய்யா.

எதிர்வினைகள்

விமர்சிக்கப்படும் நடிகர் பாலகிருஷ்ணாவின் முன்கோபம்

இந்த சம்பவத்தினை அஞ்சலி சாதாரணமாக எதிர்கொண்ட போதிலும், சமூக ஊடக பயனர்கள் பாலகிருஷ்ணாவின் நடத்தையை வன்மையாக கண்டித்தனர். மேலும் அவர் பெண்களை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பாலகிருஷ்ணா இது போன்ற நடத்தைக்காக விமர்சிக்கப்படுவது இது முதன்முறை அல்ல. முன்னதாக, ஜெய் சிம்ஹா படத்தில் அவருடன் பணிபுரிந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஒரு தவறான புரிதலுக்க்காக உதவி இயக்குனரை பாலையா அறைந்த சம்பவத்தை சமீபத்தில் நினைவு கூர்ந்தார். "AD மீது கோபமடைந்து கிட்டத்தட்ட அவரை அடித்தார் பாலகிருஷ்ணா. அவர் 'எதிர் கும்பலை' சேர்ந்தவர் என்றும் கூறினார். நான் தலையிட வேண்டியதாயிற்று" என்றார் ரவிக்குமார்.

ட்விட்டர் அஞ்சல்

அஞ்சலியை பிடித்து தள்ளிய பாலைய்யா