
காணாமல் போன மலேசியன் விமானத்தை பற்றி புதிய ஆவணப்படம்: நெட்ஃபிளிக்சில் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
சில ஆண்டுகளுக்கு முன்னர், மார்ச் 8, 2014 அன்று, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்-370, 239 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு பிரயாணத்தை தொடங்கியது.
புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானம் ரேடார் திரைகளில் இருந்து காணாமல் போனது.
அதற்கான காரணத்தை யாராலும் விளக்க முடியவில்லை. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த நிகழ்வு இன்னும் குழப்பமான, தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளது,
இதை பற்றி விரைவில் ஒரு ஆவணப்படத்தை வெளியிடப்போவதாக நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
வரும் மார்ச் 8 ஆம் தேதி இந்த ஆவணப்படம் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ஆவணப்படத்தில், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தார், ஊடகவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்கு பெறவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
நெட்ஃபிலிக்ஸில் வெளியாகப்போகும் புதிய ஆவணப்படம்
#CinemaUpdate | மலேசிய விமானம் காணாமல் போனதன் மர்மம் விலக்குமா? புதிய டாகுமெண்ட்ரி மார்ச் 8ம் தேதி வெளியாகிறது#SunNews | #MH370 | #Netflix | #MalaysiaFlight pic.twitter.com/57wnsiyNo9
— Sun News (@sunnewstamil) February 16, 2023