LOADING...
ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 OTT உரிமையை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ்
சந்திரமுகி 2 படத்தை, OTT தளமான நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 OTT உரிமையை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2023
06:13 pm

செய்தி முன்னோட்டம்

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து கொண்டிருக்கும் படம் சந்திரமுகி 2. பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் இந்த படத்தை, OTT தளமான நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ராகவா லாரன்ஸ் நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். சந்திரமுகி முதல் பாகத்தில், ரஜினிகாந்துடன் வடிவேலுவும் இணைந்து நடித்த காட்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே போல, இப்படத்திலும் வடிவேலு ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இதோடு, தங்களான், ரிவோல்வர் ரீட்டா, மாமன்னன், ஜிகர்தண்டா 2 , AK 62 , ஜப்பான் போன்ற பல தமிழ் படங்களை வாங்கியுள்ளது நெட்பிளிக்ஸ்.

ட்விட்டர் அஞ்சல்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2