
'என் உயிருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்": கணவர் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் சொன்ன நயன்தாரா
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்தை பகிர்ந்துவரும் நிலையில், அவரின் மனைவியும், நடிகையுமான நயன்தாரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து ஒரு ஸ்வீட்டான வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அதில், "இந்த சிறப்பு நாளில் உங்களைப் பற்றி நான் நிறைய எழுத விரும்புகிறேன், ஆனால் நான் தொடங்கினால், சில விஷயங்களில் என்னால் நிறுத்த முடியாது என்று நினைக்கிறேன் !! என் மீது நீங்கள் பொழிந்த அன்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் !! நம் உறவுக்கு நீங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன் !!என் உயிருக்கு வாழ்க்கையில் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்க வாழ்த்துகிறேன்" எனக்கூறி பதிவிட்டுள்ளார்.
embed
விக்கிக்கு வாழ்த்துக்கள் சொன்ன நயன்
Happpy Happpiest Birthday to the one & only @VigneshShivN God Bless😇 The first birthday with #Uyir and #Ulag 👨👩👦👦 pic.twitter.com/9EC1fXfPQB— Nayanthara✨ (@NayantharaU) September 18, 2023