
#14YearsOfSamanthaLegacy: சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா
செய்தி முன்னோட்டம்
நடிகை சமந்தா திரைத்துறையில் அடியெடுத்துவைத்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
இதை கொண்டாடும் விதத்தில், நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.
நமது சென்னை பெண்ணான சமந்தா,'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.
'VTV'-இல் அவர் சிறிய கதாபாத்திரமே செய்திருந்தாலும், அதன் தெலுங்கு பதிப்பில், அவர் த்ரிஷாவின் வேடத்தை ஏற்று, ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதன் பின்னர், தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நடித்து, முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
அவர் சினிமாவில் அறிமுகமாக 14 வருடங்கள் நிறைவுற்றதை ரசிகர்கள் கொண்டாடிவரும் நேரத்தில், நயன்தாராவும் தன்னுடைய வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.
சமந்தாவும், நயன்தாராவும், 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நெருங்கிய நட்பில் உள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
கதீஜாவை வாழ்த்திய கண்மணி!
#CinemaUpdate | திரையுலகில் 14 ஆண்டுகளாக கலக்கி வரும் நடிகை சமந்தாவுக்கு நடிகை நயன்தாரா வாழ்த்து#Samantha | #14YearsOfSamanthaLegacy | #14YearsofSAM | #Nayanthara | #NewsTamil24x7 pic.twitter.com/E2PIG9foYm
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) February 26, 2024