
நயன்தாரா-விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகளின் பெயரை இறுதியாக வெளியிட்டார் நயன்தாரா!
செய்தி முன்னோட்டம்
நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு சென்ற ஆண்டின் இறுதியில், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு, தொடர் சர்ச்சைகளில் சிக்கிய தம்பதியர்கள், குழந்தைகளின் பெயரையும், முகத்தையும் வெளியிடாமல் காத்து வந்தனர்.
ஆனால், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில், குழந்தைகளை பற்றி பதிவிடும் போது,'உயிர்', 'உலகம்' என பதிவிட்டு வந்தார்.
"இதென்னடா புது பேரா இருக்குது!" என குழம்பியவர்களுக்கு, தற்போது, நயன்தாரா விளக்கம் தந்துள்ளார்.
நேற்று நடந்த விழா ஒன்றில், தன்னுடைய குழந்தைகளின் முழு பெயரை அவர் வெளியிட்டார்.
அதன்படி, அவர்களின் பெயர் 'உயிர் ருத்ரோனில் N சிவன்' மற்றும் 'உலக் தெய்விக் N சிவன்' எனத்தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
நயன்தாரா குழந்தைகளின் பெயரை அறிவித்தார்
And finally, #Nayanthara reveals her twin boys' names... 🥺❤
— N'cafe... (@NayanCafe) April 2, 2023
Uyir Rudronil N Shivan ❤
Ulag Dhaiveg N Shivan ❤ https://t.co/7g1tYhclCd pic.twitter.com/CCHFyFthUT