தனுஷ் பற்றிய அறிக்கை பப்ளிசிட்டி ஸ்டண்டா?: நயன்தாரா ஓபன்டாக்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமீபத்தில் தனது திருமணத்தை மற்றும் வாழ்க்கை பயணத்தை விளக்கும் ஆவணப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில், அவரது திரைப்பயணத்தில் முதல் படம் முதல் தற்போதைய படங்கள் ஆகியவற்றின் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக, நயன்தாரா மற்றும் கணவர் விக்னேஷ் சிவன் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய "நானும் ரௌடி தான்" படத்தின் காட்சிகள் பெரும் பங்கு வகித்தது.
காரணம், இப்படத்தின் மூலமாகவே அவர்கள் இருவரும் சந்தித்து, காதல் வயப்பட்டனர்.
பல ஆண்டு காதலுக்கு பின்னர் இந்த ஜோடி திருமணம் செய்தது.
ஆரம்பத்தில் திருமண வீடியோவாக வெளியாகவிருந்த இந்த ஆவணப்படம், பின்னர் எந்த காரணத்திற்காகவோ நயன்தாராவின் வாழ்க்கை படமாக மாறியது.
ஓபன் லெட்டர்
தனுஷிற்கு எதிராக ஓபன் லெட்டர் எழுதிய நயன்தாரா
இந்த ஆவணப்படத்தில் 'நானும் ரௌடி தான்' படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதற்காக அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் நயன்தாரா அனுமதி கோரியும் தனுஷ் அதற்கு பதிலளிக்காமல் இழுத்தடித்ததாக நயன்தாரா 3 பக்க ஓபன் லெட்டரை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
அந்த அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படடுத்தியது.
அந்த அறிக்கையில், "என் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என புகாரிட்டார்.
PR ஸ்டண்ட்
இது PR ஸ்டண்ட் அல்ல, தனுஷின் பேச முயற்சித்தும் பலனில்லாததால் இந்த நடவடிக்கை: நயன்தாரா
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ளார் நயனதாரா.
அதில் அவரும், விக்னேஷ் சிவனும், தனுஷின் மேலாளர், தெரிந்த நண்பர்கள் என பலர் மூலமாக தனுஷை தொடர்பு கொள்ள முயற்சித்ததாக கூறினார்.
ஆனால் பதில் வராத காரணத்தால், ஆவணப்படத்தில் அவர்கள் இறுதியில் பயன்படுத்திய காட்சிகள், படக்குழு உறுப்பினர் ஒருவரால் எடுக்கப்பட்ட BTS காட்சிகள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இப்போது இருப்பதை போல, அப்போது BTS காட்சிகள் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்பதையும் அவர் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.
நியாயம்
தன் மீது தொடரப்பட்ட வழக்கு நியாயமற்றது என்பதில் இந்த கடிதம்
நயன்தாரா தனுஷ் மிகவும் விரும்பப்படும் மற்றும் புகழ்பெற்ற நடிகராக இருப்பதால், அவர் பிரச்சினையை விட்டுவிடுவார் என்று நம்பியதாக கூறினார் நயன்தாரா.
ஆனால் தனுஷ் அப்படி செய்யாமல் ஆவணப்பட டிரெய்லர் வெளியீட்டிற்குப் பிறகு பிரெச்சனையை பெரிதாகிவிட்டார் என்பது நயனின் வாதம்.
நயன்தாராவுக்கு அது "நியாயமற்றதாக" உணர்ந்ததால், அவர் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படையான கடிதத்துடன் பேச வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.
உண்மையை கூறுவதற்கு தனி தைரியம் தேவை இல்லை என்றும், பொய் கூறவே மனதிடம் வேண்டும் என்றும், தான் ஒரு போதும் மற்றவரின் இமேஜ்-ஐ கெடுக்கவோ, PR ஸ்டண்ட் செய்வதற்காகவே இப்படி செய்பவர் அல்ல என்றும் நயன்தாரா கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Next round adi vaanga vanthutanga lady super star #Nayanthara 🤣#Dhanush fans leave this attention seeker 😬pic.twitter.com/H8Q82DiB1m
— Aaru Bhai (@aaruksamy) December 11, 2024