Page Loader
மூடப்பட்ட பழமையான திரையரங்கை வாங்கிய நயன்தாரா
நயன்தாரா தற்போது திரையரங்கு பிசினஸில் இறங்கியுள்ளார்.

மூடப்பட்ட பழமையான திரையரங்கை வாங்கிய நயன்தாரா

எழுதியவர் Sindhuja SM
May 21, 2023
04:45 pm

செய்தி முன்னோட்டம்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, தற்போது திரையரங்கு பிசினஸ் தொடங்குவதற்காக சென்னையில் தனது முதல் சொத்தை வாங்கியுள்ளார். நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து வடசென்னையில் உள்ள பழைய அகஸ்தியர் தியேட்டரை அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸின் கீழ் வாங்கியதாக கூறப்படுகிறது. நயன்தாரா ஒரு தென் இந்திய பிரபலமாக அறியப்பட்டாலும், அவர் பல தொழில்களில் முதலீடு செய்துள்ளதால் அவரை தொழிலதிபர் என்றும் அழைக்கலாம். இந்நிலையில், அவர் தற்போது திரையரங்கு பிசினஸில் இறங்கியுள்ளார். தேவி திரையரங்கு குழுவிற்குச் சொந்தமான அகஸ்தியர் திரையரங்கம் 1967ஆம் ஆண்டு முதல் வடசென்னை பகுதியில் இயங்கி வருகிறது.

DETAILS

56 ஆண்டுகள் பழமையான திரையரங்கை புதுப்பிக்க இருக்கும் நயன்தாரா 

மேலும், எம்ஜிஆர், சிவாஜி கணேசன் முதல் ரஜினி, கமல், அஜித் மற்றும் விஜய் வரையிலான தமிழ் சினிமா பிரபலங்களின் எண்ணற்ற பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள் இந்த திரையரங்கில் திரையிடபட்டுள்ளது. ஒரே ஒரு ஸ்கிரீன் கொண்ட தியேட்டரான அகஸ்தியர் தியேட்டர் கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது, பெரிதளவு பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, 53 ஆண்டுகள் மக்களை மகிழ்வித்த அகஸ்தியர் தியேட்டர், 2020இல் மூடப்பட்டது. நயன்தாரா இந்த திரையரங்கை புதுப்பித்து அதை இரண்டு ஸ்கிரீன் கொண்ட தியேட்டராக மாற்ற திட்டமிட்டுள்ளார். நயன்தாரா தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக அட்லீ இயக்கி ஹிந்தியில் வெளியாக இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார் என்பது இதன் தனி சிறப்பு.