Page Loader
'நாளை நமதே' திரைப்பட பிரபலம், பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார்
அவரது இறுதி சடங்குகள் ஹைதெராபாத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

'நாளை நமதே' திரைப்பட பிரபலம், பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார்

எழுதியவர் Sindhuja SM
Nov 11, 2023
11:36 am

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான சந்திரமோகன் உடல்நலக்குறைவால் இன்று(நவம்பர் 11) காலமானார். ஹைதெராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை 9.45 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்தார். 82 வயதான சந்திரமோகனுக்கு அவரது மனைவி ஜலந்தரா மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இறுதி சடங்குகள் ஹைதெராபாத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. சந்திர மோகன் ஒரு பிரபல நடிகர் ஆவார். அவர் தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றி இருக்கிறார். அவர் ஒரு பிலிம்பேர் விருதும் இரண்டு நந்தி விருதுகளும் பெற்றுள்ளார். எம்.ஜி.ஆருடன் நடித்த 'நாளை நமதே' தான் அவர் நடித்த முதல் தமிழ் படமாகும். 'நாளை நமதே' திரைப்படத்தில் அவர் எம்.ஜி.ஆரின் சகோதரராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் சந்திரமோகன் காலமானார்