
நடிகர் தனுஷின் 51வது திரைப்படத்தில் இணைகிறார் நாகர்ஜுனா
செய்தி முன்னோட்டம்
நடிகர் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தனுஷ் தனது 50வது திரைப்படத்தினை இயக்கி நடிக்கிறார் என்றும், இதனை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனுஷ் நடித்து தெலுங்கில் வெளியான'வாத்தி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றநிலையில், தற்போது அவர் தனது 51வது படத்தினை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறாராம்.
இதனிடையே தற்போது இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா இணைந்துள்ளார் என்னும் அதிகாரப்பூர்வ தகவலினை படக்குழு இன்று(ஆகஸ்ட்.,29)பிறந்தநாள் கொண்டாடும் நாகர்ஜூனாவிற்கு வாழ்த்துக்களை கூறி, தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் இணைகிறார் தனுஷ்
#D51 - on boarding @iamnagarjuna as pivotal role for #Dhanush51 #HBDKingNagarjuna @dhanushkraja pic.twitter.com/6U4irpUimH
— Wunderbar Films (@FilmsWunderbar) August 29, 2023