Page Loader
நாக சைதன்யா-சமந்தா சர்ச்சை: தெலுங்கானா அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் நாகர்ஜுனா 
நாக சைதன்யா-சமந்தா சர்ச்சை: தெலுங்கானா அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

நாக சைதன்யா-சமந்தா சர்ச்சை: தெலுங்கானா அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் நாகர்ஜுனா 

எழுதியவர் Sekar Chinnappan
Oct 03, 2024
07:34 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி, நாக சைதன்யா மற்றும் சமந்தா ரூத் பிரபு விவாகரத்து தொடர்பாக சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். நாகார்ஜுனா தனது புகாரில், சுரேகா வேண்டுமென்றே அக்கினேனி குடும்பத்தின் பொது இமேஜை தனது அறிக்கைகளால் களங்கப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். முன்னதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்துக்கு காரணம் கே.டி.ராமாராவ் தான் என்று சுரேகா புதன்கிழமை குற்றம் சாட்டி இருந்தார். சுரேகாவின் குற்றச்சாட்டுக்கு திரைத்துறையினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், நாகார்ஜுனா குடும்பம் தற்போது சட்டரீதியாக எதிர்வினை ஆற்றியுள்ளது. நீதிமன்றத்தில் அளித்த புகாரை நாக சைதன்யா தனது எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

வழக்கின் பிரதி எக்ஸ் பக்கத்தில் வெளியீடு