Page Loader
நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது
நாக சைதன்யாவின் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது

நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Nov 23, 2024
05:11 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தனது 38வது பிறந்தநாளான சனிக்கிழமையன்று (நவம்பர் 23) தனது அடுத்த படத்திற்கு என்சி24 என்று தற்காலிகமாகத் தலைப்பிட்டு அறிவித்தார். விருபாக்ஷா மூலம் பிரபலமான இயக்குனர் கார்த்திக் வர்மா தண்டுவுடன் இணைந்து இந்தப் படம் உருவாக உள்ளது. இதுகுறித்து நாக சைதன்யா சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவில், இது புராண சுவாரஸ்யங்கள் மற்றும் நடுக்கங்கள் நிறைந்த ஒரு அகழ்வாராய்ச்சி" என்று குறிப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் லுக்கில் நாக சைதன்யா ஒரு குகையில் ஒரு பாறையின் மீது மலையேறும் கியருடன் நிற்பதைக் காட்டுகிறது. புராணக்கதைகள் மற்றும் சஸ்பென்ஸின் கூறுகளை ஒருங்கிணைக்கும் வகையில் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்சி24

என்சி24 தொடர்பான விபரங்கள்

என்சி24 திரைப்படத்திற்கு ஷாம்தத் ஐ.எஸ்.சி ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி எடிட்டிங்கை கவனிக்கிறார். அஜனீஷ் லோக்நாத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, என்சி24 தவிர, நாக சைதன்யா தனது அடுத்த படமான தண்டேலுக்கும் தயாராகி வருகிறார். அதை சந்து மொண்டேடி இயக்குகிறார். ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள மீனவ சமூகத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 7, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது. இதில் சாய் பல்லவியும் நடிக்கிறார். திரைப்படங்கள் ஒருபுறம் இருக்க, நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ஃபர்ஸ்ட் லுக்