LOADING...
சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள்
நாக சைதன்யா, நடிகை சோபிதாவை, லண்டனுக்கு டேட்டிங் அழைத்து சென்றாரா?

சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 29, 2023
10:50 am

செய்தி முன்னோட்டம்

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் அமைதியாக சென்ற அவர்கள் திருமண வாழ்க்கையில், யார் கண் பட்டதோ, இருவரும் பிரிவதாக அறிவித்தனர். எனினும் இதற்கான காரணத்தை இருவருமே தெரிவிக்கவில்லை. ஆனால், ஒரு ஹிந்தி டாக் ஷோ நிகழ்ச்சியில், சமந்தா, தானும், சைதன்யாவும் பரஸ்பரம் கடும் வெறுப்பில் இருப்பதாகவும், இருவரும் இணைவதற்கான சத்தியக்கூறுகள் இல்லை என்பது போல கூறி இருந்தார். மறுபுறம், சைதன்யாவிற்கும், பொன்னியின் செல்வன் நடிகை சோபிதாவிற்கும் காதல் என செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இதை சைதன்யாவின் ரசிகர்கள் மறுத்து வந்த நிலையில், தற்போது, இருவரும் லண்டனில் இருக்கும் பிரபல உணவகத்தில் டேட்டிற்கு சென்றுள்ளது போல ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

பின்னணியில், நடிகை சோபிதா அமர்ந்திருப்பதாக யூகிக்கப்படும் புகைப்படம்