
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் DSP
செய்தி முன்னோட்டம்
பிரபல தெலுங்கு படமான 'புஷ்பா' திரைப்படத்திற்கு இசை அமைத்ததற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
சமீபத்தில், இந்திய திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அதில், 2021ஆம் ஆண்டுக்குள் பதிவு செய்யப்பட்ட படங்கள் இடம் பெற்றிந்தன.
அதன் படி, சிறந்த இசையமைப்பாளர் விருதை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தட்டி சென்றார்.
இந்நிலையில், முதல் முறையாக தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இசைஞானி இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பின் போது, இளையராஜாவின் கால்களில் விழுந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆசி பெற்றார்.
சென்னையில் இருக்கும் இசைஞானி இளையராஜாவின் ஸ்டுடியோவில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
இளையராஜாவை சந்தித்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்
#JUSTIN ‘புஷ்பா' பட பாடல்களுக்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்து வாழ்த்து பெற்றார்#Pushpa #DeviSriPrasad #Ilaiyaraaja #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/U9P7Ebjjor
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 26, 2023