
எம்எஸ் தோனி நடிகராக அறிமுகமாகிறாரா? நடிகர் மாதவனுடன் புதிய டீசர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி மற்றும் நடிகர் ஆர்.மாதவன் இணைந்து நடித்துள்ள தி சேஸ் (The Chase) என்ற தலைப்பிலான புதிய டீசர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எம்எஸ் தோனி சினிமாவில் அடியெடுத்து வைக்கலாம் என்ற யூகங்களை இந்த டீசர் கிளப்பியுள்ளது. இயக்குநர் வசன் பாலா பகிர்ந்துள்ள இந்த டீசரில், இருவரும் ஒரு சிறப்பு அதிரடிப் படையின் சீருடையில் தோன்றுகின்றனர். குறுகிய இந்த வீடியோவில், தோனி மற்றும் மாதவன், ஒரே இலக்கு கொண்ட இரு வீரர்கள் (two fighters on one mission) என்ற டேக்லைனுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இது ஒரு புதிய திரைப்படமா அல்லது ஒரு உயர்தர பிராண்ட் விளம்பரமா என்ற குழப்பத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
ரசிகர்கள் கருத்து
எம்எஸ் தோனி இதற்கு முன்பு பல விளம்பரங்களில் தோன்றியிருந்தாலும், இந்த வீடியோ ஒரு திரைப்படத்தைப் போல மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதால், அவர் முழு நேர நடிகராக மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சமூக வலைதளங்களில் இந்த டீசருக்குப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு இன்ஸ்டாகிராம் பயனர், தல (தோனி) இறுதியாக நடிக்க வருகிறாரா? என்று கருத்து தெரிவிக்கின்றனர். திரைப்படத்திற்குரிய தலைப்பு, வலுவான டேக்லைன் போன்ற அம்சங்களுடன் இந்தத் திட்டம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், ரசிகர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. இது ஒரு திரைப்படமா அல்லது விளம்பரமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இந்த இரு ஐகான்களின் கூட்டு முயற்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.