Page Loader
தமிழ் சினிமாவுலகில் வரும் 7ம் தேதி வெளியாகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் 
தமிழ் சினிமாவுலகில் வரும் 7ம் தேதி வெளியாகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள்

தமிழ் சினிமாவுலகில் வரும் 7ம் தேதி வெளியாகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் 

எழுதியவர் Nivetha P
Jul 06, 2023
04:30 pm

செய்தி முன்னோட்டம்

ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையன்று தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வாரம் வெள்ளிக்கிழமை(ஜூலை.,7) திரையரங்கில் 9 படங்களும், ஓடிடி முறையில் 4 படங்களும் வெளியாகவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக பிக்பாஸ் புகழ் ஷிவானி, ஜிவி பட நாயகன் வெற்றி இணைந்து நடித்துள்ள 'பம்பர்' திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இதனையடுத்து மீதமுள்ள 8 படங்களும் சிறு பட்ஜெட் படங்கள் தானாம். அதன்படி, முனீஸ்காந்த்தின் காடப்புறா கலைக்குழு, விண் ஸ்டார் விஜயின் எப்போதும் ராஜா, இயக்குனர் சிவம் இயக்கத்தில் லில்லி, ஹரி உதாரா இயக்கத்தில் வில் வித்தை, ராம்குமார் இயக்கி நடித்துள்ள சித்தரிக்கப்பட்டவை, நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள இன்பினிட்டி ஆகியவைகளோடு ஹாலிவுட் திரைப்படம் இன்ஸிடியஸ் ஆகியன இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ளது.

திரைப்படம் 

ஓடிடி'யில் வெளியாகவுள்ள 4 திரைப்படங்கள் 

இதனைத்தொடர்ந்து ஓடிடி முறையில், சரத்குமார், அசோக் செல்வன் ஆகியோர் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற 'போர் தொழில்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தினை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். அடுத்ததாக, ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி, திரையரங்கில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற 'ஃபர்ஹானா' திரைப்படம் ஓடிடி'யில் நாளை வெளியாகவுள்ளது. இதனையடுத்து, 'கப்பல்'படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள 'டக்கர்' திரைப்படமும் இவ்வாரம் நெட்ப்ளிக்ஸ்-ஓடிடி'யில் வெளியாகவுள்ளது. இறுதியாக, இயக்குனர் முத்தையா இயக்கி, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து, ஆர்யா, சித்தி இத்னானி நடித்து வெளியான வெற்றிபெற்ற திரைப்படமான 'காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' திரைப்படமும் ஜி5-ஓடிடி'யில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.