நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்: பிரபுதேவா நடித்துள்ள மூன்வாக் படத்தின் டிரெய்லர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
மனோஜ் என்.எஸ் இயக்கத்தில் பிரபுதேவா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மூன்வாக்' (Moonwalk) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் 'பாபுட்டி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபுதேவாவின் வாழ்க்கையில், நக்மா மற்றும் ஸ்மிதா ஆகிய இரு பெண்கள் நுழைந்த பிறகு ஏற்படும் விசித்திரமான குழப்பங்களையும் நகைச்சுவைச் சம்பவங்களையும் மையமாகக் கொண்டு டிரெய்லர் வடிவமைக்கப்பட்டுள்ளது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், அஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் ஆகியோரின் கலகலப்பான காமெடி காட்சிகளுடன், பிரபுதேவாவின் துள்ளலான நடன அசைவுகளும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.
டிசம்பர் 24ல் ரிலீஸ்
கோபக்கார இயக்குநராக அவதாரம் எடுத்த ஏ.ஆர். ரஹ்மான்
இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக ஒரு கோபக்கார திரைப்பட இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்துத் திரையில் அறிமுகமாகிறார்.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ள இப்படத்தில், கேமரா முன் நடித்தது தனக்கு மிகவும் இயல்பான அனுபவமாக இருந்ததாக ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
முதலில் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த 'மூன்வாக்' திரைப்படம், தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 24-ஆம் தேதி குடும்பத்துடன் கண்டுகளிக்கும் முழு நீள பொழுதுபோக்குச் சித்திரமாகத் திரையரங்குகளில் வெளியாகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Moonwalk Tamil Trailer
— Prabhudheva (@PDdancing) November 27, 2026
Presenting the Official Tamil Trailer of Moonwalk, starring Prabhudeva, Yogi Babu, Aju Varghese, and Arjun Ashokan, with music by A. R. Rahman and directed by Manoj NS.
A. R. Rahman and Prabhudeva reunite after 30 years for a full-length comedy movie… pic.twitter.com/1NPa5RM9Xk