ஹாலிவுட் நடிகர்கள் போராட்டம் எதிரொலி- 2025 ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட டாம் குரூஸ் திரைப்படம்
செய்தி முன்னோட்டம்
நீடித்து வரும் ஹாலிவுட் நடிகர்கள் போராட்டத்தின் எதிரொளியால், டாம் குரூஸ் நடிக்கும் 'மிசின் இம்பாசிபிள்' படத்தின் எட்டாவது பாகம் வெளியாவதை சுமார் ஓர் ஓராண்டுக்கு பட தயாரிப்பு நிறுவனம் தள்ளிவைத்துள்ளது.
அடுத்தாண்டு ஜூன் 28 ஆம் தேதி படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான 'பேரமௌண்ட் பிக்சர்ஸ்' அறிவித்திருந்தது. தற்போது 2025 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, செயற்கை நுண்ணறிவால் வேலை இழப்பு அபாயங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி அமெரிக்க நடிகர்கள் சங்கத்தினர் மூன்று மாதத்திற்கு மேல் போராடி வருகின்றனர்.
இதனால் பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்பை, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாததால் பட்டங்கள் வெளியாவது தள்ளிப்போகிறது.
2nd card
பெயர் மாறும் இரண்டாம் பாகம்
'மிசின் இம்பாசிபிள்' திரைப்படத்தின் எட்டாம் பாகத்தின் துணைத் தலைப்பு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் தலைப்பில் இருந்து, 'டெட் ரெக்கனிங் - பார்ட் 2', என்பது நீக்கப்பட்டு, விரைவில் வேறு பெயர் வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் வெளியான 'டெட் ரெக்கனிங் - பார்ட் 1' படம் மாபெரும் வெற்றியடைந்து, உலக அளவில் சுமார் 567 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஐமேக்ஸ் கேமராக்களால் படமாக்கப்படும் 'டெட் ரெக்கனிங் - பார்ட் 2', ஐமேக்ஸ் திரையரங்குகளில் தொடர்ந்து மூன்று வாரம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மிசின் இம்பாசிபில் திரைப்படத்திற்காக இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்
‘MISSION IMPOSSIBLE 8’ has been moved from June 28, 2024 to May 23, 2025, and will no longe be titled ‘MISSION IMPOSSIBLE: DEAD RECKONING PART 2’.
— The Cine Geek (@CineGeekNews) October 23, 2023
This is due to the SAG-AFTRA strike not being resolved! pic.twitter.com/QTvBnvg2Md