
கார்த்தியின் 'சர்தார் 2' படப்பிடிப்பில் விபத்து; ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
நடிகர் கார்த்தியின், 'சர்தார் 2' படப்பிடிப்பு பூஜையுடன் இரு தினங்களுக்கு முன்னர் துவங்கியது.
இயக்குனர் பி எஸ் மித்திரன் இயக்கி வரும் இந்த படத்திற்கு, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் சண்டை காட்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆரம்பக்கட்டமாக ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பு பிரசாத் லேப்ஸில் இன்று நடைபெற்று வந்தது.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, சண்டை பயிற்சியில் ஈடுபட்ட ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை என்பவர், 20 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கீழே விழுந்தபோது ஏழுமலையின் விலா எலும்பு உடைந்ததாகவும் இதனால் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்து நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டது என்றும். அதன் தொடர்ச்சியாகவே அவர் உயிரிழந்தார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NewsUpdate | ‘சர்தார்-2’ படப்பிடிப்பின்போது தவறி விழுந்து உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை!#SunNews | #Sardar2 pic.twitter.com/FoYEuXL1aP
— Sun News (@sunnewstamil) July 17, 2024