அடுத்த செய்திக் கட்டுரை

Met Gala 2023: ஒரு லட்சம் முத்துக்கள் பதிக்கப்பட்ட ஆடையுடன் வலம் வந்த ஆலியா பட்
எழுதியவர்
Siranjeevi
May 02, 2023
03:56 pm
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் முன்னணி நடிகையான அலியா பட் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த 'MET Gala' நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் முத்துக்கள் அணிந்த ஆடையுடன் வலம் வந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில், இந்த ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சி மறைந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெல்ட்-ஐ மரியாதை செலுத்தும் வகையில் அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் உலகில் உள்ள பல பேஷன் பிரபலங்கள், தொழிலதிபர்கள் நடிகைகள் பங்கேற்றனர்.
எனவே, இந்த பேஷன் ஷோவில் நடிகை பிரியங்கா சோப்ரா கறுப்பு நிற கவுன் அணிந்துப்படி வலம் வந்தார்.
அலியா பட் முத்துகள் அணிந்த வெள்ளை நிற உடையில் காண்போரை கவர வைத்தார். தொடர்ந்து, அமெரிக்க மாடல் கென்டல் கறுப்பு நிற உடையில் வலம் வந்து கவர்ந்தார்.
செய்தி இத்துடன் முடிவடைந்தது