மெய்யழகன் படத்திற்காக கார்த்தி வாங்கிய சம்பளம் விவரங்கள் வெளியாகியுள்ளது
கார்த்தி நடிப்பில் 'மெய்யழகன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் நாள் படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை பற்றி நேர்மறை விமர்சனங்களையே வைத்துள்ளனர். நடிகர் கார்த்தி கடைசியாக நடித்திருந்த 'ஜப்பான்' படம் பெரிதாக வசூல் செய்யவில்லை. அதற்கு முன்னர் அவர் நடித்திருந்த 'பொன்னியின் செல்வன்' படத்தில், வந்தியதேவனாக அவருடைய நடிப்பு பலரையும் கவர்ந்தது. வேறு யாரையும் அந்த கதாபாத்திரத்தில் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு கச்சிதமாக நடித்திருந்தார். அதேபோல 'மெய்யழகன்' படத்திலும் அவருடைய நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்திற்கு கார்த்தி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 'மெய்யழகன்' படத்திற்காக கார்த்தி 15கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் கதை மற்றும் நடிகர் விவரங்கள்
6 ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் சேதுபதி- த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள 2வது படம் மெய்யழகன். அவர் நீண்டகாலமாக இந்த கதையில் கார்த்தியை நடிக்க வைக்க யோசித்திருந்ததாகவும், ஆனால் அவரை அணுக தயங்கியதாகவும் ப்ரீ-ரிலீஸின் போது கார்த்தி தெரிவித்திருந்தார். இந்த படத்தில், கார்த்தியின் கதாபாத்திரத்திற்கும்- அரவிந்த் சுவாமி கதாபாத்திரத்திற்கு இடையே இருக்கும் உறவை பற்றியது தான் இந்த படத்தின் கதைக்களம். ஜோதிகா- சூர்யாவின் 2டி என்டர்டெய்ண்மெட் நிறுவனம் தயாரித்துள்ள 'மெய்யழகன்' படத்தில் கார்த்தியுடன், அரவிந்த் சாமி, ராஜ்கிரன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.