மாரி செல்வராஜின் 'வாழை' OTTயில் காண தயாரா? வெளியாகும் தேதி இதுதான்!
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தனது சிறு வயதில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியிருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். மேலும் படம் பார்த்த இயக்குநர்கள் தொடங்கி பொது மக்கள் வரை பலருமே படத்தைப் பாராட்டினர். படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற படமாக மாறியுள்ளது. பலரது பாராட்டைப் பெற்ற வாழை படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 11ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில், 7 மொழிகளில் வெளியாகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.