
மஞ்சும்மேல் பாய்ஸ் OTT வெளியீடு எப்போ தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்ற திரைப்படம், சக்கைபோடு போட்டது.
இந்த திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்படாமல், ரீமேக் செய்யப்படாமல் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கில் வசூல் ஈட்டியது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில், மார்ச் மாத இறுதியில் இப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், வெளியீடு தள்ளிப்போனது.
தற்போது அதிகாரபூர்வமாக இதன் ஓடிடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, வரும் மே 3 ஆம் தேதி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாகிறது.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் இந்த திரைப்படம் வெளியாகிறது.
ட்விட்டர் அஞ்சல்
மஞ்சும்மேல் பாய்ஸ் OTT வெளியீடு
#ManjummelBoys OTT 🤞 pic.twitter.com/ffnubSfvR3
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 19, 2024