NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மூன்றாவது முறையாக அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராயை இயக்கவிருக்கும் மணிரத்னம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூன்றாவது முறையாக அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராயை இயக்கவிருக்கும் மணிரத்னம் 
    இது அவர்களின் மூன்றாவது கூட்டணியாகும்

    மூன்றாவது முறையாக அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராயை இயக்கவிருக்கும் மணிரத்னம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 06, 2024
    01:15 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் மணிரத்னம், நிஜ வாழ்க்கை ஜோடியான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் ஒரு புதிய ஹிந்தி திரைப்படத்தை திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

    குரு (2007) மற்றும் ராவணன் (2010) படங்களுக்குப் பிறகு இது அவர்களின் மூன்றாவது கூட்டணியாகும்.

    இந்த ஜோடியின் திருமண உறவு குறித்த ஊகங்களுக்கு மத்தியில் இந்த செய்தி ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

    மணிரத்னத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம் ஜூமிடம் கூறியதன்படி,"ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் ஆகியோருடன் மூன்றாவது படத்திற்கான கதையை மணி சார் தேடிக்கொண்டிருந்தார்... இறுதியாக அவர் அவர்களை இதில் நடிக்க வைக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்" என்று கூறினார்.

    பந்தம்

    அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா உடன் மணிரத்னத்தின் நெருங்கிய பந்தம்

    மணிரத்னம் முன்பு, அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரிடமும் அவர் நெருங்கிய பந்தத்தை பகிர்வதாக கூறியுள்ளார்.

    அவர் ஒரு பேட்டியில், "அவர்களிடையே நான் யாருடன் நெருக்கமாக இருக்கிறேன்? இது ஒரு தந்திரமான கேள்வி. அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உணர்கிறேன்" என்று கூறியிருந்தார். குரு மற்றும் ராவணனுக்குப் பிறகு இந்த ஜோடியுடன் மற்றொரு திட்டத்தில் பணிபுரிய விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

    பரஸ்பர மரியாதை

    மணிரத்னம் மற்றும் அவர்களின் கடந்தகால ஒத்துழைப்புகள் மீதான அபிஷேக் பச்சனின் அபிமானம்

    மணிரத்னம் மீதான தனது அபிமானத்தைப் பற்றியும் அபிஷேக் பச்சன் பேசியுள்ளார்.

    யுவா படத்திற்காக இயக்குனர் தன்னை முதலில் அணுகியதை நினைவு கூர்ந்தார் . அவர் ஜூம்மிடம்," யுவாவுக்கு என்னை ஒப்பந்தம் செய்ய முதன்முறையாக அவர் எங்கள் வீட்டிற்கு வந்தபோது, ​​​​அப்பா அமிதாப் பச்சன் ஒப்பந்தம் செய்ய அவர் வந்திருப்பதாக நினைத்தேன்." "அது நான் என்பதை அறிந்ததும், நான் பரவச நிலையை தாண்டி சென்றுவிட்டேன்."

    யுவா, குரு, மற்றும் ராவணன் படங்களுக்குப் பிறகு அபிஷேக், மணிரத்னத்துடன் இணையவுள்ள நான்காவது கூட்டணி இதுவாகும்.

    ஐஸ்வர்யா ராய், மணிரத்னத்தின் தொழில்முறை உறவு இன்னும் ஆழமாக செல்கிறது. மணிரத்னத்தின் இருவர் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு குரு, ராவணன், இறுதியாக சமீபத்திய பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இயக்குனர் மணிரத்னம்
    ஐஸ்வர்யா ராய்

    சமீபத்திய

    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்

    இயக்குனர் மணிரத்னம்

    காதல், இயற்கை இரண்டையுமே சினிமாவில் புகுத்திய இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள்  தமிழ் திரைப்படம்
    இயக்குனர் மணிரத்னமிற்கு மேலும் ஒரு மணிமகுடம்! ஆஸ்கார் குழுவில் இடம்பெற்றார்  ஆஸ்கார் விருது
    சிங்கள இயக்குனரின் படத்தை வெளியிடும் மணிரத்தினம் தமிழ் திரைப்படம்
    KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா கமலஹாசன்

    ஐஸ்வர்யா ராய்

    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    23 வருடங்களுக்கு பிறகு இணையும் ஜோடி: AK62-வில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா? நடிகர் அஜித்
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் மும்பை
    உலக அழகி ஐஸ்வர்யா ராய் விவாகரத்து கோரப்போகிறாரா? பாலிவுட் கிசுகிசு பாலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025