
ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ வழக்கின் முக்கிய குற்றவாளி கைது
செய்தி முன்னோட்டம்
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளியை டெல்லி காவல்துறை ஆந்திராவில் வைத்து இன்று கைது செய்தது.
கடந்த நவம்பர் மாதம், கவர்ச்சியான உடையில், நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்ட்டுக்குள் செல்வது போன்ற ஒரு டீப்ஃபேக் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோ வைரலானதற்கு பிறகு தான் தெரிந்தது, அந்த வீடியோவில் இருப்பது அவரே இல்லை என்பது.
சமீபகாலமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொழில்நுட்ப உதவியுடன் போலி வீடியோக்களாக உருவாக்கப்படுகின்றன.
அப்படிப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாகிய ராஷ்மிகா மந்தனா வீடியோ தான் சில வாரங்களுக்கு முன் வைரலானது.
டவ்ஜ்ஹபி
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 4 பேர்
அதனையடுத்து, ராஷ்மிகா மந்தனா உட்பட பிரபலங்கள் பலரும் அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ராஷ்மிகாவை தொடர்ந்து கத்ரீனா கைஃப், ஆலியா பட் ஆகியோரின் டீப் ஃபேக் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பிறகு, ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அந்த வீடியோவை வெளியிட்டது யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் டெல்லி காவல்துறை ஈடுபட்டது.
இந்நிலையில், தற்போது அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியை காவல்துறை கைது செய்துள்ளது.
ஏற்கனவே இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.