மம்முட்டி-ஜோதிகாவின் 'காதல் - தி கோர்' OTT ஸ்ட்ரீமிங் விவரங்கள்
மம்முட்டி மற்றும் ஜோதிகா முன்னணி வேடங்களில் நடித்த 'காதல் - தி கோர்' திரைப்படம், 2023 ஆம் ஆண்டின் மிகவும் விரும்பப்படும் மலையாள திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தத் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. மலையாளம், தமிழ் என பல மொழி சினிமா ரசிகர்களும், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருந்த வேளையில், தற்போது இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. எனினும் இந்த படம் அமெரிக்காவில் ரெண்ட் முறையில் காணலாம். விரைவில் இலவசமாக காணலாம். இந்தியாவின் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை
இந்தியாவில் OTT வெளியீட்டு தேதி
OTTplay அறிக்கையின்படி , தென்னிந்தியத் திரைப்படங்கள் பொதுவாக திரையரங்கில் அறிமுகமான நான்கு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும். இருப்பினும், இப்படத்தின் தயாரிப்பாளர்கள், அதன் OTT வெளியீட்டை 50 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் திரையிட முடிவெடுத்து, ஓடிடி வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தப் படம் இப்போது அமெரிக்காவில் OTT தளத்தில் வாடகைக்குக் கிடைக்கிறது, பின்னர் வாடகை இல்லாத ஸ்ட்ரீமிங்கிற்கு மாற்றப்படும்.
படத்தின் கதைக்களம்
பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஜியோ பேபி இயக்கி, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் ஸ்காரியா ஆகியோரால் எழுதப்பட்ட, இந்தத் திரைப்படம் ஓரினச்சேர்க்கை மற்றும் இந்தியாவில் LGBTQ+ தனிநபர்களை சமூகம் நடத்தும் முறை பற்றி பேசுகிறது. உள்ளூர் பஞ்சாயத்துத் தேர்தலுக்குப் போட்டியிடும் ஓய்வுபெற்ற வங்கி மேலாளரை (மம்மூட்டி) மையமாகக் கொண்ட கதைக்களம். அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறி அவரது மனைவி விவாகரத்து கோருகிறார் என நகர்கிறது கதை.