Page Loader
மம்முட்டி-ஜீவா நடிப்பில் வெளியானது 'யாத்ரா 2' டீஸர்
மம்முட்டி-ஜீவா நடிப்பில் வெளியானது 'யாத்ரா 2' டீஸர்

மம்முட்டி-ஜீவா நடிப்பில் வெளியானது 'யாத்ரா 2' டீஸர்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 05, 2024
04:42 pm

செய்தி முன்னோட்டம்

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'யாத்ரா'. YSR காலத்தில் அவர் சென்ற நடைப்பயணத்தின் வெற்றியை தழுவி எடுக்கப்பட்ட படத்தின் இரண்டாம் பாகம் 'யாத்ரா 2' . இந்த இரண்டாம் பாகத்தில், தற்போதைய ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. YSR கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடிக்க, ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். மஹி வி ராகவ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், ஆந்திராவில் 2009 முதல் 2019 வரையிலான ஒரு தசாப்த கால அரசியல் நிகழ்வுகளை விவரிக்கிறது. இந்த திரைப்படம், பிப்ரவரி 8 ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வர உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

'யாத்ரா 2' டீஸர்